கோவில்பட்டி அருகே பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 சிறுவர் உட்பட  8 பேர் கைது.  



தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி மேட்டுத் தெருவை  சேர்ந்த வேலுச்சாமி மகன் வெற்றிவேல் (44). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார், இந்நிலையில் சாலையில் நடந்த சென்ற வெற்றிவேலை  அந்த வழியாக வந்த சிறுவர்கள் உட்பட  8 பேர்  வெற்றிவேலை தாக்கியதாக கூறப்படுகிறது.


இதில் காயமடைந்த வெற்றிவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மூப்பன்பட்டி திருமங்கை நகர் ஞானசேகர் மகன் முகில்ராஜ் (19), கூசாலிபட்டி மேட்டுத் தெரு கோவிந்தராஜ் மகன் கார்த்திக் (20), சாஸ்திரி நகர் காளிபாண்டி மகன் ஆனந்த் (19), 17 வயதுக்குள்பட்ட 5 இளஞ்சிறார் ஆகிய 8 பேரைக் கைது செய்தனர்.