*நெருக்கடியில் தவிக்கும் கோவில்பட்டி மார்க்கெட் சாலை பகுதி*


*ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை நகராட்சி கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் வலியுறுத்தியும் கண்டுகொள்ளாமல் மெளனம் காக்கும் அதிகாரிகள்*


கோவில்பட்டி மார்க்கெட் சாலை பகுதியில் சாலை வரை ஆக்கிரமிப்புகள் தொன்று தொட்டு இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது... போக்குவரத்து நெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது...


இன்றும் காலையில் வழக்கம் போல போக்குவரத்து நெருக்கடி தான்... அதிலும் இன்று தைப்பூசம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மார்க்கெட் முருகன் கோவிலுக்கு வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.


அதிலும் வடக்கு பகுதியில் கோவில் வாசல் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததால் பக்தர்களினால் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை... சென்றவர்கள் வெளியே வர முடியாத நிலை.... மெயின் சாலை பகுதியில் இருந்த வாசலில் இருந்த பகுதியிலும் மக்கள் கூட்டம் இருந்ததால் பக்தர்கள் பரிதவித்தனர்


மறுபுறம் மார்க்கெட் மெயின் சாலையில் இருபுறம் லாரிகள் நின்றதால் அப்பகுதியிலும் போக்குவரத்து நெருக்கடி... மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை..


மார்க்கெட் சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்... மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை இருப்பது மட்டுமின்றி, அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும், அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் குறித்தும், தொடர்ந்து*அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் மணிமாலா* ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வலியுறுத்தி பேசி வருகிறார்...


இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காத்தும் வரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கருத்து