கோவில்பட்டி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரி - அப்பளம் போல் நொறுங்கிய கார் 4 நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்...
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த உச்சிமாகாளி கண்டெய்னர் ஓட்டுனர் தூத்துக்குடியில் இருந்து மதுரையை நோக்கி ஒட்டி சென்று கொண்டிருந்தார் அப்போது சிவனைந்தபுரம் அமைந்துள்ள போலீஸ் சோதனைச் சாவடியை கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கண்டைனர் லாரி சாலை நடுவே தடுப்பு சுவரின் மீது மோதி சாலையில் தலைக்குப் புற கவிழ்ந்தது,இந்தவிபத்தில் அவ்வழியாக வந்த இரண்டு கார்கள் மீது மோதி கார்கள் அப்பளம் போல் நொறுங்கின சம்பவம் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் போலீசார் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,விபத்து தொடர்பாக சாத்தூர் தாலூகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்துள்ள லாரியை அகற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாற்று சாலையில் வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் அனுப்பி வைத்து வருகின்றனர்.