கோவில்பட்டியில் அரசு வட்டார நூலகத்தில் 22 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள அரசு வட்டார நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை நூலக அபிவிருத்தி சிறப்பு திட்டத்தின் கீழ் 22 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் படிப்பகத்திற்கான இரண்டாம் தள கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினால். மேலும் நூலகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயின்று வரும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.