தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன்
முத்துப்பாண்டி (42). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார், இவருக்கு திருமணம் ஆகி ஜெயலட்சுமி (40), மற்றும்
வெங்கடேசன் (19), மகள் ராகவி என
இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் முத்துப்பாண்டியன் நண்பர்களான அதே பகுதியை
சேர்ந்த மணிகண்டன் (23), கார்த்திக், முனியசாமி ஆகிய 3
பேருடன் சேர்ந்து
அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அமர்ந்து நான்கு பேரும் மது அருந்தி உள்ளனர்.
அப்போது போதை அதிகமான நிலையில் கூடுதலாக பீர் பாட்டில் வாங்க வேண்டும் என்றும்,
அதை யார் வாங்க வேண்டும்
என்றும் நான்கு பேருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முத்துப்பாண்டி
மணிகண்டனை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த
மணிகண்டன் தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துப்பாண்டியை
சரமாரியாக குத்தியதில், முத்துப்பாண்டி
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து கோவில்பட்டி மேற்கு காவல்
நிலைய போலீசார் முத்துப்பாண்டியன் உடலை கைப்பற்றி உடற்கூர் ஆய்வுக்காக அனுப்பி
வைத்து, கொலை செய்த
மணிகண்டனை கைது சிறையில் அடைத்தனர்.
Kovilpatti
பீர் பாட்டில் வாங்குவதில் பிரச்சனையில் பெயிண்டர் குத்தி கொலை?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கேரளா கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு?
அடுத்த
முன்னாள் வழக்கறிஞர் குமாஸ்தா குத்தி கொலை.
இதையும் படிக்கலாம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!
02 Oct 2026
காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!
02 Oct 2026
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026