கோவில்பட்டியில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மகன் மாரிசாமி (64), இவர் கோவில்பட்டி நீதிமன்ற சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் பலத்த காயம் அடைந்த மாரிச்சாமி, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் சேர்ந்த முத்துக்குமார்(43) என்பவர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.