கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகன்(38), இவர் கோவில்பட்டி அருகே சென்னை சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் முருகன் உடலை கைப்பற்றி வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் முருகன் தற்கொலை செய்வதற்கு முன்பாக நான் சாகப் போகிறேன் என்று செல்போனில் கூறியதாக கூறப்படுகிறது.