கோவில்பட்டி நகரில் சாலையோர மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக் கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!





தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மற்றும் நகரில் சாலையோர மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் காரணமாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மட்டுமன்றி, விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி  

பாரத் லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின்  நிறுவனத் தலைவர் S K. கந்தவேல் என்பவர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு  திடீரென கையில் தேசிய கொடியூடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும்  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கந்தவேல் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.



 கோவில்பட்டி நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவது மட்டுமின்றி, விபத்துகளும் அதிகரித்துள்ளதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே ஆக்கிரமிப்பினை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முன்பே காவல்துறையிடம் மனு கொடுத்த நிலையில்  நேற்று இரவில் வந்து போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்ததாகவும், இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட கந்தவேல் தெரிவித்தார்.