தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் பழைய இருசக்கர வாகனம் மூலமாக வீடு வீடாக சென்று ரேஷன் அரிசி வாங்கி கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்து அங்கிருந்து, கேரளாவிற்கு வாகனங்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது, தகவலின் பேரில் சுப்பிரமணியபுரம் பகுதியில் சோதனை செய்தபோது, ஒரு சிறுவன் உட்பட 6பேர் கொண்ட கும்பல் ரேஷன் அரிசியை குடோனில் இருந்து சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தபோது, போலீசார் 76பேரையும் சுற்றி வளைத்தனர். அதில் 23 மூட்டைகளில் 1150கிலோ ரேஷன் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கோவில்பட்டி ஊரணித் தெருவை சேர்ந்த சிவராமகுமார், தங்க சரவணன், அஜய் பிரசாத், திருப்பதி, மாரி ராஜா மற்றும் ஒரு சிறுவன் உட்பட 6பேரையும் கைது செய்துதூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 3 பழைய இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றனர். இந்த கும்பலுக்கு இடையில் நடக்கும் மோதல் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களை தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து தகவல் கிடைத்ததும் செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்க சென்ற போது, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்தி செல்ல பயன்படுத்தி வாகனத்தின் சாவி தொலைந்து விட்டது என்று கதை கூறினார். தனிபிரிவு போலீசார் சாவியை அவர்களிடம் ஒப்படைத்து இருந்த போதும், சாவி தொலைந்து விட்டதாக கூறியது செய்தியாளர் களை மட்டுமல்ல காவல்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் முயன்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது:அரிசி கடத்தலுக்கு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு அதிகாரிகளே துணை போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்...
Kovilpatti
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் முயன்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது:அரிசி கடத்தலுக்கு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு அதிகாரிகளே துணை போவதாக குற்றச்சாட்டு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகை,1.5 லட்சம் பணம் கொள்ளை!
அடுத்த
மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது: சீறிப்பாய்ந்த 39 ஜோடி மாடுகள்!
இதையும் படிக்கலாம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!
02 Oct 2026
காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!
02 Oct 2026
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026