கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது - 150கிராம் கஞ்சா பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் ஆவலநத்தம் விலக்கு அருகே வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தபோது, வாகனத்தில் 150 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த மருதுபாண்டி, ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் இசக்கி சங்கர், பசுந்தனை கீழமங்கலம் முத்துராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.