கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோமதி தேவர்(75) மனைவி சுப்புத்தாய்(70), இந்த தம்பதியினர் தனது பேத்தியை பார்க்க பெங்களூர் சென்று விட்டு வீடு திரும்பியபோது,வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் உள்ள 10 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது குறித்து சுப்புத்தாய் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.