ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் வருடாந்திர வைகாசி பொங்கல் உற்சவ  திருவிழா கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டு கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது, திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் காமாட்சி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாதாரணை நடைபெற்றுது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் கேரளா சிங்காரி செண்டை மேளத்துடன்  பெண்கள் முளைப்பாரியை தலையில் வைத்து கமுதி முக்கிய வீதிகளின் வழியாக சென்று கமுதி குண்டாறு கங்கை நேரில் கரைக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றுது, அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால் மழையையும் பொறுப்பெடுத்தாமல் பெண்கள் மழையில் நனைந்தபடியே முளைப்பாரிகளை வைத்து பெண்கள் கும்மியாட்டம் நடனமாடி வழிபாடு நடத்திய பின் கங்கை நீரில் முளைப்பாரிகளை கரைத்து வழிபாடு செய்தனர்.