கமுதி அருகே மழை வேண்டி நள்ளிரவில் செம்மறி ஆடுகள் பலியிட்டு வழிபாடு: ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் அசைவ அன்னதானம்!



தற்போது தமிழக முழுவதும் உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் தற்போது விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது,இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் நல்ல மழை பெய்ய வேண்டி விவசாயம் செலுத்திட, அக்கிராமத்தில் வருடா  வருடம் புரட்டாசி மாதம் செம்மறி ஆடுகளை பலியிட்டு வழிபாடு செய்வது வழக்கம்.   


அதேபோல் இந்த ஆண்டும் வயல்வெளியில் வைத்து எல்லை பிடாரி அம்மனுக்கு கிராமத்தில் விளைந்த நெல் அரிசியால் சாதம் சமைத்து, நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100க்கணக்கான செம்மறி ஆடுகளை எல்லை பிடாரி  பலியிட்டு, நள்ளிரவில் வழிபாடு நடத்தி, பலி கொடுக்கப்பட்ட செம்மறி ஆடுகளை சமைத்து  அதிகாலையில் ஆண்களுக்கு மட்டுமே சுடச்சுட அசைவ அன்னதான விருந்து வழங்கப்பட்டது.எல்லை பிடாரி அம்மனுக்கு வருடம் வருடம் மண் பீடம் அமைத்து வழிபாடு நடத்துவதும், இது சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை அனைத்து பெண்களுக்கும் இக்கோவிலில் அம்மனை வழிபாடு நடத்துவது கிடையாது. ஆண்கள் மட்டுமே அம்மனை வழிபடுவதும், அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு உட்கொள்வதும் இக்கோவிலின் பாரம்பரியம் என்று அக்கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த அன்னதானத்தில் கமுதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.