ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் இருந்து நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களுக்கு கமுதி பேருந்து நிலையத்திலிருந்து சாயல்குடி வழியாக சென்று மூக்கையூர் கிராமத்திற்கு அரசு பேருந்து நாள்தோறும் இந்த வழித்தடத்தில்  இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழக முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்தில் உள்ள  ஊர் பெயர் பலகை டிஜிட்டல் முறையில் வழித்தட ஊர்கள் காண்பிக்கப்படுகிறது.

கமுதி பேருந்து நிலையத்திலிருந்து மூக்கையூர் செல்லும் TN.63. N.1868 பதிவு எண் கொண்ட இந்த அரசு பேருந்தில் வழித்தட ஊர் பெயர்கள் மின்னல் வேகத்தில் நகர்வதால் பயணிகள் மிகவும் குழப்பம் அடைகின்றனர், அதேபோல் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து   கிளம்பும்போது, பேருந்தில் நடத்துனர் பேருந்தில் இல்லாததால்,  பேருந்து எந்தெந்த நிறுத்தத்தில் நிற்கும் என்று யாரிடமும் கேட்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல் பேருந்து நடத்துனர் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து கிளம்பும்போது பேருந்தில் ஏறாமல் அங்கு உள்ள மார்க்கெட் பகுதியில் சென்று உணவு வாங்குவதும், பேருந்து  செல்லும் வழியில் பேருந்தில் ஏறுவதை வழக்கமாக வைப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கமுதி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ராஜகுமாரிடம் கேட்டபோது,  இனிமேல் இந்த மாதிரியான தவறுகள் நடைபெறாது எனவும், பேருந்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் தெரிவித்துள்ளார்.