சாயல்குடி அருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்:இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த ஏராளமான காளைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வீரசக்கதேவி ஆலய வருடாந்திர வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டிகள் எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. மிகவும் கடுமையாகவும்,உற்சாகமாகவும் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.