கமுதி அருகே கோவில் திருவிழாவை இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம்-சீறிப்பாய்ந்த 60 ஜோடி காளைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காணிக்கூர் -பெருமாள்தவைவனேந்தல் கிராமத்தில் பகவதி அம்மன் பாம்பலம்மன் கோவில் வருடாந்திர ஆணி பொங்கல் உற்சவ திருவிழாவை முன்னிட்டு,மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகுசிறப்பாக நடைபெற்றது. பெரியமாடு,சின்னமாடு பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், மதுரை, தேனி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தன, போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த மாபெரும் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை காணிக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பாண்டி கலையரசி கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை காண சாலையின் இருபுறமும் நின்று பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.