ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு கோட்டை முனீஸ்வரர் சுவாமி தரிசனம் செய்து 300 ஆண்டு பழமையான கமுதி கோட்டையைஆர்வமுடன் கண்டுகண்டு ரசித்த பின் செய்தியாளிடம் பேசிய தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.


* தமிழகத்தில் ஆங்காங்கே தவறுகள் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் நடக்கத்தான் செய்யும் தமிழகத்தில் மக்கள் தொகை இன்றைக்கு எட்டரை கோடி ஆகிவிட்டது  போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

* இன்னும் அரசு அதிகமாக துரிதமாக  நடவடிக்கை எடுத்து தமிழகத்தை ரவுடிசம்  போதையில்லாத தமிழகம் முயல வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

*ஆசிரியர் போராட்டம் குறித்த கேள்விக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தும் என்று நம்பித்தான் அரசு ஊழியர்கள் வாக்களித்தனர் அரசு ஊழியர்கள் சிறுபான்மையினர் மக்களால்தான்  திமுக அரசு ஆட்சிக்கு வந்தது,ஆனால் தற்போது சிறுபான்மையினரும் அரசு ஊழியர்களும் போராடுகின்றனர்,யார் ஏமாற்றப்பட்டார்கள் யார் ஏமாற்றியவர்கள் யார் என்று சிறுபான்மையினர் மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தெரியும்.


* தமிழகத்துக்கு தேவையான நிதி மத்திய அரசு ஒதுக்க வேண்டும் வாக்களித்தார்கள் வாக்களிக்கவில்லை என பாரபட்சம் காட்டக்கூடாது.


*அதிமுக ஆட்சியில் தொலையை நோக்கி திட்டம் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து இருந்தால் 3 ஆண்டில் தென் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனை இல்லாத பகுதியாக விவசாயம் நிறைந்த  பகுதியாக  மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இவ்வாறு பேசினார்.