இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கூலித் தொழிலாளியின் மகள் காவியா ஜனனி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார். இதை தொடர்ந்து சாதனை படைத்த மாணவிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சார்பில் நிதி உதவி மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த மாணவியை கெளரவிக்கும் வகையில் தமிழக பாஜக சார்பில், ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையுடன், தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மாணவி காவியா ஜனனிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வாழ்த்து மடல் கடிதத்தை அனுப்பியுள்ளார். இதனை இராமநாதபுரம் மாவட்ட பாஜக  தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பொறுப்பாளர் முரளிதரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மாணவியின் சொந்த ஊரான பேரையூர் கிராமத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்று பாஜக நிர்வாகிகள் மாணவிக்கு சால்வை அணிவித்து கௌரவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மாநில அளவில் முதல் 499/500க்கு மதிப்பெண் பெற்ற  மாணவி காவியா ஜனனிக்கு தமிழக பாஜக சார்பில் ரூ 25 ஆயிரத்துடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து மடல் சான்றுடன் ராம்நாடு மாவட்ட தலைவர் முருகேசன் பொறுப்பாளர் முரளிதரன், பொதுச்செயலாளர் கணபதி , பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கவுன்சிலர்கள் பூபதி ராஜா, சோதிராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று வழங்கி கௌரவித்தனர்.