ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வளைய பூக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரிய முத்தம்மன்,சந்தன மாரியம்மன், பத்திரகாளியம்மன் பெரியாண்டவர் ஆலய வருடாந்திர பொங்கல் உற்சவ விழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.  திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாதாரணை நடைபெற்று வருகிறது, நிகழ்வின் பத்தாவது திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நடைபெற்ற 508 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திருவிழாவின் கடைசி நாளான சனிக்கிழமை மாலை முளைப்பாரி ஊர்வலம் விமர்சையாக ஊர்வலமாக சென்று கங்கை நீரில் கரைத்தல் வைபவம் நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக பொங்கல் உற்சவ விழா நிறைவு பெறுகிறது.