கமுதி அருகே முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு 501 பால்குடம் ஊர்வலம்!   ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மூர்த்திவிநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து ஐயனார், அழகுவல்லி ,முப்பிடாறிஅம்மன்,கண்ணபிரான், வீரியகாளியம்மன் ஆலய வைகாசி பொங்கல் உற்சவ விழா மற்றும் முத்துராமலிங்கதேவர் 32ம் ஆண்டு மற்றும் 11ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு கிராமத்தில் காப்பு கட்டிய பக்தர்கள், 501 பால் குடங்களை  வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சிலம்பம் நடனமாடி ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் நகர்வலம் சென்று சுவாமிகளுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு நடைபெற்ற தீபாதாரணையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பால்குட ஊர்வலத்தின் போது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை சிலம்பம் சுத்தி அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.