கமுதி அருகே ஸ்ரீ சந்தன மாரியம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்று கூட்டு வழிபாடு!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அய்யனார்குளம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் வருடாந்திர வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்து ஸ்ரீ சந்தன மாரியம்மனை மனம் உருகி வழிபட்டனர். பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு மூலவர் சந்தன மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்கார தீபாதாரணை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.