விளாத்திகுளத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்! தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் மினிக்கள் திருத்தம் முகவரி மாற்றம் மற்றும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் இணைத்தல் ஆகியவை மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் - 2024 நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் : 206-ல் நடைபெற்று வந்த இந்த சிறப்பு வாக்காளர் முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கட்சியினர் பலர் உடனிருந்தனர்..
இந்தியா
வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த MLA மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தாசில்தார் லெனின் நேரில் ஆய்வு - மூடப்பட்ட நீர்வரத்து ஓடையை தோண்ட உத்தரவு!
அடுத்த
தமிழர் விடுதலைக் களம் கட்சி சார்பில் சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை !