தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநம்பிபுரம் கிராம பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இந்தாண்டு பல்லாயிரம் ஏக்கரில், உளுந்து, பாசி, கம்பு, சோளம், மக்காச்சோளம் என பல்வேறு பயிர்களை பயரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதில் 1598 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்து நன்கு வளர்ந்துவந்த மக்காச்சோளம் பயிர்களை தற்போது "காட்டுப்பன்றிகள்" மேய்ந்து முற்றிலும் நாசம் செய்துள்ளன. இதேபோன்று ராசாப்பட்டி, கைலாசபுரம், வெம்பூர், அழகாபுரி, அயன் கோடாங்கிபட்டி, முத்தலாபுரம், மேலக்கரந்தை, கீழ்க்கரந்தை, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பயரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களால் பெருமளவு விவசாயம் பாதிப்படைந்துள்ளது. ஏற்கனவே காட்டுப்பன்றிகளின் தொல்லை பற்றி வேளாண்மை துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் என மாவட்ட ஆட்சியர் முதல் எம்.எல்.ஏ., அமைச்சர்கள், முதல் அமைச்சர் வரை என பலமுறை காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டும் இதுநாள் வரை எந்த ஒரு பலனும் இல்லை என்கின்றனர் விவசாயிகள். இதனால் என்னசெய்வதென்றே தெரியாமல் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் தொடர்ந்து தனது விளாத்திகுளம் தொகுதியில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் படும் இன்னல்களை பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும், விவசாயிகள் நேரடியாக சென்று வேதனையை தெரிவித்தும் இந்த நொடிப்பொழுது வரை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினராக இருந்து வரும் திமுகவைச் சேர்ந்த மார்க்கண்டேயன் MLA காட்டுப்பன்றிகளினால் சேதமடைந்த பயிர்களை பார்க்கவும் வரவில்லை... காட்டுப்பன்றிகள் அட்டூழியத்தை கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை... தொகுதி சட்டமன்ற உறுப்பினரைப்போன்று தான் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியும், மாவட்ட அமைச்சர் கீதாஜீவனும் விவசாயிகள் படும் வேதனையை துளியும் கண்டுகொள்ளாமல், "மக்கள் களம்" என்று பெயருக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மட்டுமே மும்முரம் காட்டி வருகின்றனர்.
இவற்றையெல்லாம் விட.... விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தொகுதியில் நடைபெறும் திறப்புவிழாக்கள், திருமண விழாக்கள், புதுமணைப் புகுவிழா என அனைத்திற்கும் தவறாமல் "லிஸ்ட்" போட்டு முந்தி செல்வதில் காட்டும் ஆர்வத்தை... அவருக்கு தேர்தலில் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக பதவி கொடுத்த விவசாயிகளின் வேதனையை மட்டும் கண்டுகொள்ளாமல், விவசாயிகளையும், விவசாயத்தையும் அலட்சியப்படுத்துவது விவசாயிகள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீதும், திமுக அரசின் மீதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, உடனடியாக காட்டுப்பன்றிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராம விவசாயிகளும் ஒன்றினைந்து தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH 38) மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்தவிருப்பதாக விவசாயிகள் கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.
தற்போது சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க சென்றது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தனது சொந்த தொகுதியான விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக காட்டுப்பன்றிகள், மான்கள் போன்ற வன விலங்குகளால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கூட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய போது வன விலங்குகளால் விளாத்திகுளம் தொகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அந்தக் கோரிக்கைக்கு தமிழக அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை என்று விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.