தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலப்புரம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத நிலையில் உள்ளதால், கண்மாய் முழுவதும் சீமை கருவேல மரங்கள் மற்றும் பூவரச செடிகள் கண்மாய் முழுவதும் புதர்கள் மண்டி கிடப்பதால் 30 அடி உயரமுள்ள தடுப்பணை தற்போது 2 அடி மட்டுமே மணல் திட்டுக்களால் சூழப்பட்டுள்ளது, கண்மயில் உள்ள தடுப்பணைகள் மற்றும் மதகுகள், பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால்,விரிசல் விட்டு " இன்னைக்கு விழுமோ நாளைக்கு விழுமோ " என்ற நிலையில் உள்ளது, இந்தபொதுப்பணித்துறை கண்மாயை நம்பி, பூதலப்புரம், மாதலாபுரம், பெத்தாகூடன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி, நூத்தலக்கரை, சின்னையாபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 800 ஏக்கர் விவசாயம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று வந்தது. தற்போது கண்மாய் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கன்மாயில் மூன்று மாதங்கள் மட்டுமே தண்ணீர் இருப்பதால் மற்ற நேரங்களில் தங்களால் விவசாயம் செய்யமுடியவில்லை என்றும், அதேபோல் பூதலப்புரம், பெத்தாகூடன்பட்டி, நூத்தலக்கரை, சின்னையாபுரம் ஆகிய கிராமங்களுக்கு இந்த பொதுப்பணித்துறை கண்மாயின் மூலமாகத்தான் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது, தற்போது குடிநீர் விலைக்கு வாங்கி வருவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.
எனவே அரசு இந்த பொதுப்பணித்துறை கண்மாயை முறையாக தூர்வாரி மதகுகளை சரி செய்து தடுப்பணைகளை புதிதாக கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பேட்டி-சண்முகராஜ்: பூதலாபுரம்.