தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக விளாத்திகுளம் பகுதிகளிலுள்ள ஆறு, குளங்கள் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்டவைகள் முழுவதுமாக நிரம்பியதால் கரைகள் உடைப்பு ஏற்பட்டு விவசாய விளைநிலங்களுக்குள் நீர் புகுந்ததால், சூரங்குடி, புளியங்குளம், கெச்சிலாபுரம், இராமச்சந்திராபுரம், விருசம்பட்டி, வேடப்பட்டி, குளத்தூர், பனையூர், வேப்பிலோடை  உட்பட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு கிராமப் பகுதிகளில்  இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த கம்பு, சோளம், உளுந்து, பாசிப்பயறு மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்து.  

இந்தநிலையில், தற்போது தமிழக அரசு  சார்பில், மானாவாரி பயிர்ச்சேதங்களுக்கு 1 ஹெக்டருக்கு ரூ.7410 ஆக இருந்த நிவாரண தொகையை ரூ.8500 ஆக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். (2 1/2 ஏக்கர் என்பதே 1 ஹெக்டர் பரப்பளவாகும்) ஆனால் , இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 1 ஏக்கருக்கே ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஒரு ஹெக்டேருக்கு ரூ.8,500 அறிவித்திருப்பது.... முழுவதுமாக மானாவாரி விவசாயைத்தை மட்டுமே நம்பி வாழும் விளாத்திகுளம் பகுதி விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.... அதனால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்   மானாவாரி பயிர்களுக்கு இழப்பீடு தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையானது போதுமானதாக இல்லை என்பதால் இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து விளாத்திகுளம் பகுதியில் உள்ள மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

மேலும், பயிர்கள் சேதமடைந்த விளாத்திகுளத்தின் பல பகுதிகளில் தற்போது வேளாண்மை மற்றும் தோடட்க்கலைத்துறை அதிகாரிகள் சார்பில், ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்..