தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுசின்னையாபுரம் கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறை கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்குநத்தம் கிராமத்தில் இருந்து ஆரம்பித்து, முத்துப்பட்டி, நடுக்காட்டூர், ராணி சேதுபுரம், துரைச்சாமிபுரம், குமாரலிங்கபுரம்,P. ஜெகவீராபுரம்,புதுசின்னையாபுரம் உள்ளிட்ட 15 கிராமங்கள் நீர்ப்பாசன வசதி பெறும் இந்த பொதுப்பணித்துறை கண்மாயை நம்பி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெல், மிளகாய், உளுந்து, சோளம்,கம்பு, குதிரைவாலி, வெங்காயம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். தற்போது 40 ஆண்டுகளுக்கு மேல் கண்மாய் தூர் வாராததால் கண்மாய் முழுவதும்  சீமை கருவேல மரங்கள், பூவரச செடிகள், மற்றும் முற்பூதர்கள் என  கண்மாய் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது, பல ஆண்டுகளாக கண்மாயில் உள்ள கரம்பை மண்அள்ளப்படாததால்  சுமார் 40 அடி ஆழமுள்ள கண்மாய் தற்போது 8 அடி ஆழம்  மட்டுமே உள்ளதுதடுப்பணைகளும் சரிவர பராமரிக்காததால்  காற்றாண்டு வெள்ளத்தில் அடித்து ஆங்காங்கே நொறுங்கிக் கிடக்கின்றன. தடுப்பணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் தடுப்பணை மேலே தத்தி வராமல் தடுப்பணியில் உள்ள விரிசலின் வழியாக பாய்ந்து வருகிறது. கடந்த 16,17 தேதி அன்று பெய்த மழையின் போது காற்றாற்று வெள்ளத்தில் தடுப்பணை அடித்து செல்லப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதாகவும், புதுசின்னையாபுரம் மற்றும் P.ஜெகவீராபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 400 மணல் மூட்டைகளை வைத்து  தடுப்பணையை பாதுகாத்ததாகவும், இல்லை என்றால் தடுப்பணை உடைந்து நான்கு கிராமங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.(கடந்த வாரம் பெய்த கனமழையின் போது தடுப்பணை உடையும் நிலை இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறிய போது, அதிகாரிகள் இன்னும் ஒரு மணி நேரத்தில் மழை நின்று விடும் அணைக்கு எந்த சேதம் ஏற்படாது என்று  அலட்சியமாக கூறியதாக கூறப்படுகிறது)   தற்போது மணல் திட்டுகளாக இருப்பதால்,தண்ணீர் கண்மாயில்   ஒரு மாதம் மட்டுமே நிற்பதால் சரியாக தங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும்,எனவே தடுப்பணையை முறையாக பராமரித்து கண்மாயை முறையாக தூர்வார வேண்டும் என்று புது சின்னையாபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பேட்டி- பிரசாத்-P. ஜெகவீராபுரம்.