சிவலார்பட்டி கிராமத்தில் 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  சிவலார்பட்டி, முத்துச்சாமிபுரம், மேலப்பட்டி,மெட்டில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் மற்றும் படைப்புழுக்களால் மக்காச்சோள பயிர்கள் இந்தாண்டு அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், சிவலார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் படைப்புழுக்கள் மற்றும் காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, திமுக கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.