தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக விளாத்திகுளம் அருகே
உள்ள ஆற்றங்கரை, குமாரபுரம்
சொக்கலிங்கபுரம், தொப்பம்பட்டி,
என்.வேடப்பட்டி, அச்சங்குளம், ஓயம்பட்டி, கல்குமி, சிங்கிலிபட்டி, தாப்பாத்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10000
ஏக்கரில்
பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசி, சோளம், கம்பு, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் இந்த ஆண்டு விவசாயம்
இதில் அதிகப்படியாக உளுந்து மட்டும் 3000
ஏக்கர் பரப்பளவில்
பயிரிடப்பட்டிருந்தன, தற்போது செய்த
தொடர் மழையின் காரணமாக 3000 ஏக்கர் உளுந்தம் பயிர் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் பெரிதும்
வேதனை அடைந்துள்ளனர்.
இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், நிலத்திற்கு உழுது கூலி, பயிரிடுதல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு, களை எடுத்தல் என ஒரு ஏக்கருக்கு ரூ.20,000
வரை செலவு செய்து
விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்து இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யும் நிலையில்
பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியதால் போட்ட பணத்தைக் கூட எடுக்க முடியாத
சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில்
தற்போது தமிழக அரசு வெள்ளத்தால் சேதமடைந்த மானாவாரி பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக
ஹெக்டேருக்கு ரூ.8500 அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிவாரணத் தொகையை அதிகப்படுத்தி உடனடியாக
வழங்குவதோடு பயிர் காப்பீட்டு தொகையையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயம்
3000 ஏக்கரியில் பயிரிடப்பட்டிருந்த உளுந்த பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அப்பளம் போல நொறுங்கி கிடக்கும் சாலைகள்!
அடுத்த
"விவசாயிகள்னா மட்டும் கால் வலிக்க நிக்கணும்... அதிகாரின்னா உக்காந்துட்டேதான் பேசுவாரா?
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026