விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.
கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்பவரின் மகன் காளிராஜ் (39), இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் 05-05-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு வேம்பாரில் உள்ள தனது உறவினரை பார்க்க இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் விளக்கு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி காளிராஜ் கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று காலை தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் காளிராஜின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.