விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தை மாசிலாமணி என்பவரின் மகன் வேல்முருகன் (26) வேல்முருகன் எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் குளத்தூர்-ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ஒலிபெருக்கி மாட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.