எட்டயபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் உமறுப்புலவர் தெருவை சேர்ந்த அஸன்மைதீன் மகன் அசாருதீன் (23) எட்டயபுரத்தில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். தனது பெற்றோரிடம் தான் ஒருபெண்ணை விரும்புவதாகவும் அந்த பெண்ணுடன் தனக்கு திருமணம் செய்து வைக்க கூறியுள்ளார். அதற்கு பெற்றோர் மூத்த சகோதரர்கள் இருவருக்கு திருமணம் முடித்துவிட்டு உனக்கு முடிப்போம் என கூறியுள்ளனர். இதனையடுத்து நேற்று இரவு தூங்காமல் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் பெற்றோர் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அசாருதீன் பெட்ரூமில் உள்ள பேனில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சென்ற எட்டயபுரம் போலீசார் உடலை உடல்கூறு ஆய்விற்காக எட்டயபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.