எட்டையாபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை:போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ஆதிதிராவிடர் தெரு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சிவசக்தி முருகன் (21) டிப்ளமோ பட்டதாரியான இவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார், இவரது தந்தை செந்தில்குமார் தாய் முத்துக்குமாரி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவசக்தி முருகனின் தாய்,தந்தை இருவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். வீட்டின் கதவை வெகு நேரமாகத் தட்டி உள்ளனர்,வீட்டின் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது,சிவசக்தி முருகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து சிவசக்தி முருகனின் உடலை மீட்ட எட்டையாபுரம் போலீசார் பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, சிவசக்தி முருகன் எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் எட்டயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.