விளாத்திகுளம்  அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு . 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சக்கிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மகன் அஜய்(23) பெயின்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்த இரும்பு ஏணியை தூக்கிக் கொண்டு வரும் சமயத்தில் அருகே இருந்த மும்முனை(3 PHASE) மின்சார ஒயர் மீது எதிர்பாராத விதமாக அஜய் தூக்கிக்கொண்டு வந்த இரும்பு ஏணி உரசியதால் திடீரென இரும்பு ஏணி மூலமாக மின்சாரம் அஜய் உடலிலும் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அஜய்யை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜய் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு மின்சாரம் தாக்கி உயிரிழந்த அஜய் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.