விளாத்திகுளம் அருகே விவசாய பணிக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முருகேச பாண்டி (25),இவர் இவரது சொந்த நிலத்திற்கு மிளகாய் விதை மற்றும் உரம் விதைத்து விட்டு வீட்டிற்கு வந்து தலைக்கு குளித்துள்ளார்.

இந்த நிலையில் குளித்த சிறிது  நேரத்தில் முருகேச பாண்டியக்கு உடல்நிலை சோர்வு ஏற்பட்டுள்ளது, இதனை அடுத்து குடும்பத்தினர்  முருகேச பாண்டியை 108 வாகனம் மூலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர், ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர் முருகேச பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.