விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் சங்கர்(24), இவர் தூத்துக்குடி - மேலஅரசரடியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் வழக்கம் போல் வேலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் புளியங்குளத்தில் இருந்து சென்று கொண்டிருந்தபோது, விளாத்திகுளம் குளத்தூர் வடக்கு காலனி அருகே எந்த ஒரு இருட்டில் மிளிரும் அறிவிப்பு ஸ்டிக்கர் இல்லாமல் முன்னாள் சென்ற திருட்டு மணல் மாட்டு வண்டி மீது சங்கர் ஓட்டி வந்த இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்த சங்கரின் உடலை கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய போலீசார் பிரேத ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.