விளாத்திகுளத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு பகுதியைச்சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரசாத் (24), இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, வாகன விபத்தின் விபத்தின் காரணமாக இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார், இதனால் வலி தாங்க முடியாமல் மனவேதனையில் இருந்த பிரசாத் 01-01-2026 மாலை 7 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதனை அடுத்து பிரசாத்தின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.