விளாத்திகுளத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் அய்யனார்(27), இவர் இவரின் வீட்டின் அருகே உள்ள இளையராஜா என்பவரின் இருசக்கர வாகனத்தை கடந்த 19-02-2025 தேதி இரவு திருடிய வழக்கில்,அய்யனாரை விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், அய்யனார் மீது விளாத்திகுளம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.