தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மனைவி முத்துச்செல்வி (25), 23-01-2024 செவ்வாய்க்கிழமை முத்துச்செல்வியை அதே கிராமத்தை சேர்ந்த சத்தியா, முத்துக்குமார், மதுலட்சுமி, முனியசாமி,அஜித் குமார் ஆகிய 5 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதால் மனவிரத்தியில் முத்துச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து முத்து செல்வியின் கணவர் முனியசாமி குளத்தூர் (பொறுப்பு) ஆய்வாளர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தும், ஆய்வாளர் விஜயலட்சுமி, சத்தியா, முத்துகிருஷ்ணன், முதுலட்சுமி, முனியசாமி, அஜித்குமார் ஆகிய 5 பேருக்கும் ஆதரவாக வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதால், தற்போது 24-01-2024 புதன் கிழமை இரவு வரை தூத்துக்குடி அரசு மருத்துவமனை யில் உயிரிழந்த முத்துச்செல்வியின் கணவர் மற்றும் உறவினர்களுடன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முத்துச்செல்வியின் கணவர் முனியசாமி நானும் திமுக தொண்டர்தான், நானும் உங்களுக்கு தான் ஓட்டு போட்டு உள்ளேன், எனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முனியசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
Vilathikulam
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை?ஒரு தலைப்பட்சமாக செயல்படும் காவல்துறை...
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
அடுத்த
தை மாத பிரதோஷ வழிபாடு : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026