உலக சுற்றுச்சூழல் தினம் - எட்டயபுரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு !
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தது மட்டுமின்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியல தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்து பள்ளி மாணவ மாணவியர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.