எடப்பாடியார் ஆட்சி அமைந்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு : விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா வெள்ளையம்மாள்புரம், நமச்சிவாயபுரம், சிவஞானபுரம், A. வேலாயுதபுரம்,பொம்மையாபுரம், அருங்குளம் குளத்தூர்,பனையூர், கெச்சிலாபுரம்,கமலாபுரம், கந்தசாமிபுரம்,வள்ளிநாயகிபுரம், முத்துராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய வேட்பாளர் சத்யா கூறுகையில், குலவிளக்கு திட்டம் மூலமாக தகுதி உள்ளவர்கள் தகுதி இல்லாதவர்கள் என அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா குளிர்சாதன பெட்டி வழங்கப்படும்,100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றி உரிய நேரத்தில் ஊதியம் உயர்த்தப்படும், பெண்களுக்கு பாதுகாப்பு அம்மாவின் வழியில் எடப்பாடியார் ஆட்சி அமைந்தால் மட்டுமே வழங்கப்படும் எனத்தொடர்ந்து விதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் N.K.பெருமாள் சின்னப்பன் ஒன்றிய செயலாளர் மகேஷ், ராமச்சந்திரன்,பால்ராஜ் குளத்தூர் நகரசெயலாளர் வேல்மயில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிவகாமசுந்தரி, ஆனந்த்,சுரேஷ், மருதுபாண்டி,மாநிலபொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் மாரிச்செல்வி,குட்லக்செல்வராஜ், பாஜக நிர்வாகிகள்சக்தி, கந்தசாமி,சந்திரசேகர், சுயம்புஅம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.