பாஜக அரசை கண்டித்து மடி பிச்சை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய 4034 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது 


அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  கீழஈரால் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திமுக கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் தலைமையில் திமுகவினர் மற்றும் 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சிறுமி ஒருவர் பாஜக அரசே எங்களை பட்டினி போடாதே என்று வாசகத்துடன் பாதகை ஏந்தி கலந்து கொண்டனர். 

மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டு பெண்கள் மடி பிச்சை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.