எட்டையாபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு.



திருநெல்வேலி தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி உமாமகேஸ்வரி (45),  இவர் ஓட்டுரிமை விலாசம் மாற்றுவதற்காக கோவில்பட்டி தாலுகா அலுவலகம் வந்தபின், எட்டயபுரம் செல்வதற்காக கோவில்பட்டியில் இருந்து ஆட்டோவில் எட்டையாபுரம் வந்து கொண்டிருந்தபோது, குமாரகிரி அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து உமாமகேஸ்வரி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தலையில் பலத்த காயம் அடைந்த உமாமகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இதுகுறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் போலீசார் உமாமகேஸ்வரியின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, ஆட்டோ ஓட்டுனரான கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் சாலை எஸ்.எஸ். நகர் பகுதியை சேர்ந்த பொன்னையா என்பவரின் மகன் குட்டிராஜ் (53) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.