விளாத்திகுளம் அருகே கடிதம் எழுதி வைத்து பெண் தூக்கிட்டு தற்கொலை?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் கிராமத்தைச்சேர்ந்த மெரின் என்பவரின் மனைவி இன்ஃபன்ட் தீபிகா (34), இன்ஃபன்ட் தீபிகாவிற்கு சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மனவிரக்தியில் இருந்து வந்த இன்பன்ட் தீபிகா தனது கணவர் மெரினுக்கு தனது குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இதனை அடுத்து இன்பண்ட் தீபிகாவின் உடலை கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.