யார் வேண்டுமென்றாலும் யாருடன் போட்டிக்கு வரலாம்.. வெல்வது என்பதுதான் இலக்கு - திமுக - த. வெ. க. இடையே தான் போட்டி என த. வெ. க. தலைவர் விஜய் கூறியதற்கு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் பதில்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனுக்கு எட்டயபுரத்தில் வைத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். மேளதாளத்திற்கு ஏற்ப திமுக கட்சித் தொண்டர்கள் ஆட்டம் ஆடி அசத்தினர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற பிறகு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில்...
முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர வேண்டும் என்றும் அகில இந்திய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவராக இந்தியாவிற்கு வழிகாட்டும் தலைவராக பரணிமித்து வந்திருக்கிறார். ஆகையால் இந்த ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று அனைத்து மாநிலங்களிலும் மதச்சார்பற்ற அணியில் எதிர்பார்க்கின்றனர்.
விளாத்திகுளம் தொகுதியில் மூன்றாவது முறையாக நிற்பதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
கரிசல்காட்டு பகுதி வானம் பார்த்த பூமி இந்த மக்களின் கோரிக்கைகள் அதிகமாக இருக்கிறது. இந்த மக்களின் கோரிக்கைகளில் 50 சதவீதம் கடந்த கால ஆட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆசியோடு நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்
மக்களின் ஆதரவுடன் தொகுதியின் உட்பட்ட அமைப்பு வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சி மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு. விளாத்திகுளம் பகுதியில் பொருளாதார மேம்பாடு,கல்வி மற்றும் மருத்துவம் என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி அடுத்த கட்ட சூழ்நிலைக்கு விளாத்திகுளம் தொகுதியை கொண்டு வருவதில் முனைப்பு காட்டுவேன்.
கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம். ஒருமித்த கருத்துடன் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்றார்.
யார் வேண்டுமென்றாலும் யாருடன் போட்டிக்கு வரலாம்.. வெல்வது என்பதுதான் இலக்கு. நாங்கள் யாரையும் (த. வெ. க) போட்டியாளர்களாக கருதவில்லை. ஆனால் தேர்தல் களத்தில் இருக்கும் அத்தனை பேரையும் போட்டியாளராக தான் கருதுகிறோம்.
களம் என்றாலே போட்டியாக தான் கருதப்படும். அந்த வகையில் அவர்(விஜய்) எதிர்த்து களத்தில் நிற்கிறார். அவர்களையும் நாங்கள் மதிக்கிறோம். தேர்தல் களத்தில் வெற்றி பெறுவோம்.
உலகம் முழுவதும் இன்று எதிர்கொண்டு உள்ள பிரச்சனை கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு.
இப் பகுதி மக்கள் ஒரு தலைவனாக சட்டமன்ற உறுப்பினராக என்னை ஏற்றுக் கொள்வதற்கு நானே இயற்கை வேளாண்மை. ஒரு நாளைக்கு 200 பேருக்கு மூன்று வேளை உணவு கொடுக்கும் வகையில் 14 வருடங்களாக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தாமல், பயோகேஸ் பற்றி, கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு என இயற்கை வேளாண்மை பண்ணை அமைத்து இந்தியாவில் நான் ஒரு ரோல் மாடலாக இருக்கிறேன். ஒரு வாழுகின்ற விஷயத்தை கற்று இருக்கிறோம்.
விறகு தேவையில்லை, வெளிநாட்டில் இருந்து கேஸ் வாங்கதேவை இல்லை, அதற்காக திட்டங்கள் எங்களிடம் உள்ளது. ஆகையால் தான் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தன்னை மீண்டும் இந்த இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவோம் என்றார்.