கொடூரமான மரண ஓலம் நடந்து கொண்டிருக்கும்போது முதலமைச்சர் அதைப் பற்றி கவலைப்படாமல் சென்னையில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்கிறார்.



கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு கூட அனுசரணையாக இருந்த இந்த அரசாங்கம் மாணவி கொலை சம்பவத்தில் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - பாஜக மூத்த தலைவர் * தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!



 தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்  செய்தியாளர்களிடம் பேசுகையில்... 




வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு நிலைமை,கவலைப்படாதீர்கள் என்று வார்த்தைகளால் சொல்கிறோம் தவிர கவலைப்படாமல் இருக்க முடியாது, தமிழக முழுவதும் இத்தகைய கொடூரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து தான் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு வருகிறோம். 


விளாத்திகுளத்தில் நன்றாக படிக்கக்கூடிய மாணவி ஆறு மணிக்கு காணாமல் போய் சரியான நடக்க எடுத்திருந்தால் கண்டுபிடித்து இருக்கலாம், அடுத்த நாள் கிராம மக்களே கண்டுபிடிக்கும் அளவிற்கு தமிழகத்தில் பாதுகாப்பு நிலை இருக்கு என்பது வருத்தம் அளிக்கிறது. இதை அரசியலுக்காக பேசவில்லை...



பெண் குழந்தைகளை பார்த்து அவர்களுக்கான மருத்துவராகவும் நான் இருந்துள்ளேன், குழந்தையின் உடலில் இத்தகைய துன்பங்கள் வரும்போது எவ்வளவு வலி இருக்கும். உயிர் போகும் அளவிற்கு என்ன கொடுமை நடந்து கொண்டிருக்கிறது இன்று பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது ,

இது ஒரு சம்பவம் அல்ல. பெண்களுக்கான சமூக பாதுகாப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு கூட அனுசரணையாக இருந்த இந்த அரசாங்கம் மாணவி கொலை சம்பவத்தில் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது, நானும் நிர்வாகத்தில் இருந்திருக்கிறேன். கொடூரமான மரண ஓலம் நடந்து கொண்டிருக்கும்போது முதலமைச்சர் அதைப் பற்றி கவலைப்படாமல் சென்னையில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு விளம்பரம் பண்ணிக்கிட்டு எல்லாவற்றியும் குறை சொல்லிக் கொண்டு.. என்னங்க நடக்கிறது 



உண்மையில் மன வேதனையாக சொல்கிறேன் நான் அரசியலுக்காக பேசவில்லை, தமிழக முதல்வர் இங்கு வந்திருக்க வேண்டும். உடனடியாக போர்க்கால அடிப்படையில் காவல்துறை கூட்டம் நடத்திருக்க வேண்டும்.



இந்த ஒரு சம்பவம் அல்ல மதுராந்தகத்தில் இதேபோன்று 14 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 16 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளது, எந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையோ. ஒரு குழந்தை இயற்கை உபாதையை கூட கழிக்க முடியாத சூழ்நிலை இருப்பது மிக வருத்தம் ,கண்ணீர் அஞ்சலி செலுத்த ஒரு பேனர் கூட வைக்க முடியாது நிலைமை ,எல்லா விதத்திலும் அந்த குடும்பத்திற்கு சமுதாயம் பாதுகாப்பாக உறுதுணையாக இருக்க வேண்டும். 



உயிரிழந்த மாணவியின் சகோதரி படித்துக் கொண்டிருக்கிறார் அவரது கல்விக்கு சமுதாயமும் பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் இப்போது எதையும் சொல்ல முடியவில்லை. 

அந்த குடும்பத்திற்கு பக்கபலமாக அந்தக் குழந்தை கல்விக்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம் ,அந்தக் குடும்பத்தோடு தமிழ்நாடு நிற்கிறது ,ஆனால் அரசாங்கம் மறுபடியும் மறுபடியும் தவறு செய்து கொண்டிருக்கிறது ,கஞ்சா வழக்குகள் போக்சோ வழக்குகள், 59 சதவீதம் தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறது, 



8696 கொலைகள் தமிழகத்தில் நடந்திருக்கிறது ,குற்றவாளிகள் சுதந்திரமாக நடந்து கொண்டிருக்கின்றனர் இது வருத்தத்துக்குரியது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்பதுதான் எனது பிரார்த்தனை என்றார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் ஆறுதல் கூறிவிட்டு வெளியே வரும்போது அங்கு நின்றிருந்த பெண்கள் முதலமைச்சர் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். இது எங்க சிங்கம் ( ஜெயலலிதா) இருந்திருந்தால் 2 நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து இருப்பார். ஃதிமுக ஆட்சி குடும்ப ஆட்சி ,நீங்க கோடீஸ்வரர் வீட்டில் பிறந்தாலும். கெத்தா சிங்கமா எல்லா இடத்துக்கு வாரிங்க. எளிமையின் உருவம். நீங்க இந்த மண்ணில் கால் வைத்ததும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார். 


 திருட்டு திமுக ஒளிந்து விடும்,ஜெயலலிதாவுக்கு அடுத்து உங்க பெயர் தான் விளங்கும் என்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்