கொடநாடு கொலை வழக்கு என்றைக்கு எடுக்கப்பட்டாலும்  சட்டமன்ற உறுப்பினராக கூட எடப்பாடி பழனிச்சாமி வர முடியாது!




தேர்தலுக்குப் பின்னர் கூவத்தூரில் உருவான அதிமுக 3வது இடம் பிடிக்கும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.. 



வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக இரண்டும் சரிசமமான இடங்களில் தான் போட்டியிடும்  - பின்னர் எப்படி அதிமுக ஆட்சிக்கு வரும் * -  விளாத்திகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில்  *முன்னால் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பேச்சு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில்  முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில் 



2017 முதல் 2021 வரை எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு அடிமையாக இருந்த காரணத்தினால்தான் அவர்கள் சொல்வது எல்லாம் கேட்டு கேட்டு  குட்டுப்பட்டு தமிழகத்தை சுயமரியாதை இல்லாத அளவிற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அதிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதற்காக தான் எத்தனை நெருக்கடி வந்தாலும், மும் மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி தரப்படும் என்று கூறி இந்திய திணிக்க முற்படும்போதம், நிதி கொடுக்கவில்லை என்றாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று , அண்ணா இயற்றிய இருமொழி கொள்கைதான் என்று  இந்தியாவிலேயே கொள்கைக்காக ஒன்றிய அரசினை எதிர்க்கும் ஒரேதலைவர் மு. க. ஸ்டாலின் கோவைக்கு மெட்ரோ ரெயில் வரவில்லை,, எய்மஸ் கட்டிடப் பணிகள் இன்னும் முடியவில்லை,  தமிழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி தருவதில்லை காரணம் அவர்களுக்கு அடிபணிவது இல்லை என்பதால்,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு  சரி இல்லை   என்று  பேசும் எடப்பாடி பழனிச்சாமி அவர் முதல்வராக இருந்த போது ஸ்டெர்லைட் பிரச்சினையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது  பத்திரிகையில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார்.



கொடநாடு கொலை வழக்கு என்றைக்கு எடுக்கப்பட்டாலும்  சட்டமன்ற உறுப்பினராக கூட எடப்பாடி பழனிச்சாமி வர முடியாது,ஆதாரங்களை அழிக்க நினைத்தாலும் சட்டம் உங்களை துரத்தி துரத்தி அடிக்கும். இன்றைக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பாக இருக்கலாம்.


தேர்தலுக்குப் பின்னர் கூவத்தூரில் உருவான அதிமுக 3வது இடம் பிடிக்கும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது,அதிமுகவை பாஜகவின் கிளைக் கழகமாக ஆக்கிவிட்டனர். தனித்தன்மை இல்லை. கொள்கை இல்லை

தலைமைக் கழகத்தில் கூட்டணி பேசாமல் ஸ்டார் ஹோட்டலில் கூட்டணி பேசுகின்றனர். இந்த அளவு தான் அவர்களுடைய சுயமரியாதை,திமுக கூட்டணி கட்சியினர் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு வந்து தலைவரை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் கூட்டணி ஏற்படுகிறது இது தான் திராவிட மடல், சுயமாரியதை



 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக இரண்டு பேரும் சரி சமமான இடங்களில் தான்  போட்டிடுவார்கள். பின்னர் எப்படி ஆட்சிக்கு வருவார்கள்  



2024ல் பாஜக கூட்டணியில் இருந்து ஏன் எடப்பாடி பழனிசாமி போனார்.2025ல் ஏன்? சேர்ந்தார் என்பதற்கு விடை இல்லை. இதுதான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக. பாஜகவின் அடிமை என்றார்.