விளாத்திகுளம் அருகே 40 ஆண்டுகள் சுற்று சுவர் பிரச்சனைக்கு தீர்வு எப்போது? அரசு அதிகாரிகள், அரசியல் மாற்றமே மட்டுமே தவிர பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை?   

 கடந்த (14-12-2022)  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பாரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் முடிவெடுத்து பணியை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அருகில் உள்ள தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தினர் நிலப்பிரச்சனை காரணமாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சார்பில், கோவில் சுற்றுச்சூழல் கட்டுவதற்கு அனுமதி அளித்து அதற்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.  இதனைத்தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சூழல் கட்டும் பணியை தொடங்கிய போது அங்கு வந்த கிறிஸ்தவ மதத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியதையடுத்து தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் விளாத்திகுளம் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா தலைமையில், ஏராளமான போலீசார் இப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.பின்னர் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் (14-12-2022) வருவாய் துறை சார்பில் இந்த நிலம் அளவை செய்யப்பட்டு சுமுகமான தீர்வு எட்டப்படும் என தெரிவித்தது அடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.வேம்பாரில், இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட இந்த பிரச்சனை தொடர்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் இப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.இதனைத் தொடர்ந்து ,இருதரப்பினரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து வந்த நிலையில்,இன்று 22-11-2023 விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை மற்றும் காவல் துறையை சேர்ந்த ஏராளமானோர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் ,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சுப்பிரமணியபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதில் இருதரப்பினரிடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும் நிலையில் பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் W.P(MD)No.1269/2023  நீதிமன்றம்  சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்குவதற்கு அனுமதி அளித்தும், பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டும் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, பத்ரகாளியம்மன் கோவில் தரப்பினை சேர்ந்தவர்கள் சுற்றுச்சுவர் கட்டிக் கொள்வதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும், காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க முன்வராமல் காலம் தாழ்த்தி வந்ததால் இன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பத்ரகாளியம்மன் கோவில் தரப்பினை சேர்ந்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வந்து வட்டாட்சியரிடம் முறையிட்டனர். இதையடுத்து விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் டி.எஸ்‌.பி ஜெயச்சந்திரன் தலைமையில்,கோவில் நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், வருகின்ற நவம்பர் 29-ம் தேதியன்று பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு நீதிமன்ற உத்தரவின் படி உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். கடந்த 40 ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்,வட்டாட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர்கள்  என அரசு அதிகாரிகளும், அரசியல் ஆட்சி மாற்றம் மட்டுமே நடைபெற்றதே தவிர இந்த இரு மதத்தினருக்கும் இடையே உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனை  எப்போது முடிவுக்கு வரும் என்று அரசு அதிகாரிகளும் வேம்பார் கிராம மக்களும் எதிர்பார்த்து இருப்பது மட்டுமே தொடர் கதையாக உள்ளது என்பது  மட்டுமே குறிப்பிடத்தக்கதாகும்.....