கிராமசபைக் கூட்டத்திற்கு " நடப்பு கணக்கு புள்ளிவிவரம் இல்லாமல் உங்களுக்கு என்ன வேலை இங்கே? " வேளாண்மை மற்றும் தோட்டக்கலை  அலுவலர்களைக் கடிந்து கொண்ட விளாத்திகுளம் எம்.எல்.ஏ!



நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.குமாரட்டையாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அ.வேலாயுதபுரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இந்தகூட்டத்திற்கு வருவாய்,ஊராட்சி, மின்சாரம், அரசுபோக்குவரத்து, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை என அனைத்து துறைக்கும் முறையாக நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு இன்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ரஞ்சித் மற்றும் குடிமைப் பொருள் வளங்கள் உள்ளிட்ட அரசு  அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்திருந்தனர், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், ஒவ்வொரு அதிகாரியாக கூப்பிட்டு இதுவரை இந்த கிராமத்திற்கு உங்களின் துறை சார்ந்த திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்பட்டது, இனிமேல் செயல்படுத்த உள்ளது குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறுமாறு கூறினார்,அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறையினரும் கிராமத்திற்கு செயல்படுத்தப்பட்ட உள்ள திட்டங்கள் மற்றும் இனிமேல் செயல்படுத்து உள்ள திட்டங்கள் குறித்தும் ஏதும் புகார் இருந்தால் கூறலாம் என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.


அதனைத் தொடர்ந்து தோட்டக்கலத்துறை உதவி அலுவலர் சரத்குமாரிடம், இதுவரை இந்த கிராமத்திற்கு உளுந்து,பாசி என தோட்டக்கலை சம்பந்தமாக எவ்வளவு விவசாய பொருட்கள் வழங்கப்பட்டது, அதில் விவசாயிகள் எவ்வாறு பயன்பெற்றனர், தோட்டக்கலை துறை மூலமாக அதிக அளவில் பயனடைந்த விவசாயி யார்? என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார், சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தோட்டக்கலைத்துறை உதவியாளர் சரத்குமார் “திரு திருவென” முழித்தார், அதனைத் தொடர்ந்து வேளாண்மை அலுவலர் நவநீதனிடம் உங்களின் இணை இயக்குனர் எங்கே? அவரிடமும் கடந்தாண்டு வேளாண்மை துறை சார்பில் பயனடைந்த விவசாயிகளின் பட்டியலு எங்கே என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.இதுகுறித்து விளாத்திகுளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குமரனிடம் கேட்ட போது, எனக்கு வேலை இருந்தது என்னால் அவ்வளவு தூரம் வர முடியாது அதனால் எனது உதவி அலுவலர்களை அனுப்பினேன் என்று மலுப்பலான பதிலை கூறினார்.நிகழ்வில் விளாத்திகுளம் பணிமனை மேலாளர் A.M.சாமி எப்போதும்வென்றான் இளம்மின் பொறியாளர் அருண்குமார், கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள்புதுராஜா உட்பட துறை சார்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.