விளாத்திகுளம் அருகே குடிநீர்
வேண்டும்!!! காலி குடங்கள் -பாய் தலகாணியோடு படுத்து உறங்கும் போராட்டம் நடத்திய
மக்கள் - எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தில் பரபரப்பு! தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுரைக்காய்பட்டி ஊராட்சி ரணசூர் நாயக்கன்பட்டி
கிராமத்தில் 80 சதவீதம் மக்கள்
பட்டியல் இன அருந்ததியர் மக்களுக்கு
ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஆனால் கடந்த
2 மாத காலமாக முறையாக
பஞ்சாயத்து நிர்வாகம் தங்களுக்கு குடிநீர் தர வழங்கவில்லை இது தொடர்பாக கடந்த சில
மாதங்களுக்கு முன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி பின்பு குடிநீர்
வழங்கினர்.தற்போது கடந்த 10 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் திறந்து
விடுவதில்லை. இது சம்பந்தமாக சுரைக்காய்பட்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் சென்று
முறையிட்டால் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறி
இன்று வட்டாட்சியர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள்
முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி பாய்
தலகாணி உடன் படுத்து உறங்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர் ...
போராட்டம்
நடத்திய கிராம மக்கள் இடம் எட்டயபுரம்
வட்டாட்சியர் மல்லிகா, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்
கண்ணா , எட்டயபுரம் காவல்
ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை
அழைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில்
பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை
அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து
சென்றனர்.
Vilathikulam
காலி குடங்கள் -பாய் தலகாணியோடு படுத்து உறங்கும் போராட்டம் நடத்திய மக்கள் - எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தில் பரபரப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"எனக்கும் விதை கொடுங்கள் நானும் விவசாயி தான்" மானிய விதை கேட்ட எம்எல்ஏ மார்க்கண்டையன்!
அடுத்த
மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026