"விசில் கிசில் " எல்லாம் பத்தி நம்ம கவலைப்பட வேண்டாம் கதைக்காகாது எவ்வளவு சத்தம் வேகமாக வருதோ அதே வேகத்தில் போயிரும்: விஜய்யை மறைமுகமாக தாக்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ !




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம்,அயன்கரிசல்குளம், வெம்பூர்,புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026  அதிமுக வாக்குறுதிகள் துண்டு பிரச்சாரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான  கடம்பூர் ராஜு பேசுகையில் ...



"விசில் கிசில் " அதை பத்தி எல்லாம் நம்ம கவலைப்பட வேண்டாம், கதைக்காகாது, அது சும்மா கேக்குறதுக்கு கொஞ்ச நேரம், அந்த சத்தம் எவ்வளவு வேகமா வருதோ அதே வேகத்தில் போய்விடும் தாவிக்க தலைவர் விஜயை மறைமுகமாக தாக்கினார்.




தமிழக முழுவதும் சாராயம்,கஞ்சா போதைப்பொருள் பழக்கம் இந்தியாவில் எந்த மாநிலத்தையும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் உள்ளது.



சிறுமிகளைக் கூட தற்போது பள்ளிகளுக்கு அனுப்ப பயமாக உள்ளது, நாட குடியரசு அடைந்த நாள் முதல் இந்த ஐந்தாண்டுகளில் சட்ட ஒழுங்கு கெட்டு  நாடு மிகவும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.



பால்,பஸ் கட்டணம், மின்கட்டணம் உயர்வு, இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு முறையான பயிர் காப்பீட்டுத் தொகை  வழங்காமல் துப்பு கட்ட ஆட்சியாக உள்ளது.


கொலை கற்பழிப்பை தடுக்க துப்பில்லை துப்புகட்ட முதலமைச்சராகவும், நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் உள்ள முதலமைச்சராக உள்ளார் என கடம்பூர் ராஜு பேசினார்.



அதனைத் தொடர்ந்து புதூர் பஜார் பகுதியில் வீதி வீதியாக கடைக்கடையாக சென்று அதிமுகவின் வாக்குறுதிகள் சட்டமன்ற பொது தேர்தல் 2026 மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்  அடங்கிய துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்.




இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபதி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்தியா, புதூர் நகர செயலாளர் ஆண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்புச் செயலாளர்மோகன் , சிறுபான்மை அணி சதீஷ், குட்லக் செல்வராஜ் மற்றும் பாஜக,தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.